3,269 Views
கொழும்பில் இருந்து அங்கு சென்றுள்ள குறித்த இருவரும் தமது நண்பியொருவர் அக்குழந்தையை தமக்கு தந்ததாக தெரிவித்துள்ளனர்.
எனினும் இருவரும் வழங்கிய தகவல்கள் முரண்பாடாக இருந்தமையால் சந்தேகப்பட்ட பொலிஸார் இருவரையும் கைதுசெய்துள்ளனர்.


பின்னர் விசாரணைகளின் போது பொலிஸ் நிலையத்துக்கு வந்த பெண்ணும் , குழந்தையின் தாயும் ஒரே வீட்டில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.
குழந்தையின் தாய் விபச்சார விடுதியொன்றில் இருப்பதாகவும் , குழந்தை அங்கேயே வளர்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரை தற்போது பொலிஸார் தேடிவருகின்றனர்.
குறித்த விபச்சார விடுதியின் உரிமையாளர் , அக்குழந்தையை கொன்று விடுமாறு கூறி அப் பெண்ணிடம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது குறித்த குழந்தை தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.