8,056 Views
இச்சம்பவம் குறித்து தெரியவருவது;
"ஜோர்டான் நாட்டை சேர்ந்த 36 வயது பெண் ஹனான் மொஹமட் அப்துல் கரிம். இவர் கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு சிசேரியன் செய்த மருத்துவர், குழந்தையை வெளியே எடுத்துவிட்டு அவரது வயிற்றில் தையல் போடும்போது மறதியாக தனது கையடக்கத்தொலைபேசியை அந்த பெண்ணின் வயிற்றின் உள்ளே வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தையுடன் வீட்டுக்கு சென்ற ஹனானுக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வயிற்றில் இருந்து கையடக்கத்தொலைபேசி அதிர்வதையும் உணர்ந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹனானின் தாயார் தனது மகளுடன் மீண்டும் அதே தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
ஆனால் அந்த மருத்துவமனையில் இருந்தவர்கள் சரியாக பதில் கூறாததால் உடனடியாக ஹனான் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, அவரது வயிற்றின் உள்ளே கையடக்கத்தொலைபேசி இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.. பின்னர் மீண்டும் ஹனானுக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த கையடக்கத்தொலைபேசியை வெளியே எடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் ஜோர்டான் நாட்டு பத்திரிகைகளில் வெளிவந்ததால் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜோர்டான் சுகாதார அமைச்சு, இச்செய்தி பொய்யானதெனவும், சோடிக்கப்பட்ட செய்தியெனவும் தெரிவித்துள்ளது.
எனினும் இது தொடர்பில் விசாரணை நட த்தப்படுமெனவும் தெரிவித்துள்ளது.