யாழ்ப்பாண புங்குடுதீவில் பாடசாலை மாணவி ஒருவர் கூட்டுவன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 5 சந்தேக நபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.
ஊர்காவற்றுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி தீவக மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.
இதன்போது காவல்துறையினர் மீதும், காவல் நிலையம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 14ம் திகதி மாலை புங்குடுதீவு 10ம், 11ம் வட்டாரங்களை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் நேற்றய தினம் மதியம் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மேலும் 5 சந்தேக நபர்களை ஊர்காவற்றுறை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
குறித்த 5 பேரும் கொழும்புக்கு பயணிக்கவிருந்த நிலையிலேயே கைதான காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
தற்போது சந்தேகநபர்களின் பாதுகாப்பு கருதி யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அந்த காரியாலயத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.