கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி அங்குண-கொல-பெலெஸ்ஸ பிரதேசத்தில் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட நிகழ்வில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் உதவி காவல்துறை அத்தியட்சர் மற்றும் காவல்துறை சார்ஜன்ட் ஒருவரும் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தமையை அடுத்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதனடிப்படையில், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் ஏற்படுத்தப்பட்டிருந்த விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, துப்பாக்கியை எடுத்துச் சென்ற ராணுவ கோப்ரல் நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.