நயன்தாரா நடித்த 'ஐரா' திரைப்படம் ,மார்ச் 28ஆம் திகதி வெளியாகும் எனவும், படத்தின் பணிகள் எல்லாம், அசுர வேகத்தில் நடைபெற்று வருவதாகவும்,திரைப்படக் குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் 'கா' என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பாடல் ஒன்று உண்டு, கண்டுபிடியுங்கள் என ரசிகர்களுக்கு கூறப்பட்டுள்ளது.
காதல், காலம், கானல், காகம், கானலி, காரணி, காயம், கானம், காரம், காவியா, காமம், காவாய், காற்று, காட்சி, என பல வார்த்தைகளை ரசிகர்கள் ஊகித்துக் கூறியபோதும் , அனைத்தும் தவறு என படக்குழுவினர் கூறியுள்ளதால், இந்த வார்த்தையை கண்டுபிடிக்க முடியாமல், ரசிகர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் 'காரிகை' என்ற வார்த்தையில் தான் இந்தப் பாடல் தொடங்குவதாக படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர். 'காரிகை' அல்லது காரிகா என்றால் "பெண்" என்று அர்த்தமாம். மதன்கார்க்கி ,அருமையாக இந்தப் பாடலுக்கு வரிகள் மூலம் உயிர் கொடுக்க, கே.எஸ் சுந்தரமுர்த்தி இசையில் ,சித்ஸ்ரீராம் பாடியுள்ளார்.
இரண்டு வித்தியாசமான வேடங்களில் ,நம்ம லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தில், கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உட்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.