யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி படுகொலை தொடர்பில் மற்றுமொறு சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி இந்த சம்பவத்துடன் தொடர்பு கொண்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளவர்களை தம்மிடம் கையளிக்குமாறு பொதுமக்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி படுகொலை தொடர்பில், நிலாவெளி பிரதேச மக்களும் மாணவர்களும் இன்றைய தினம் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இதேவேளை கைதான சந்தேக நபர்களை மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லும் போது வைத்தியசாலையில் கூடிய குறித்த நபர்களை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பொலிஸாரால் நேற்று அழைத்து செல்லப்பட்ட போதே பொது மக்கள் இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.