பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற ஆரவ் நாயகனாக நடிக்கும் நடிக்கும் படம் `ராஜ பீமா'. நரேஷ் சம்பத் இயக்கும் இந்த படத்தில் ஆரவ் ஜோடியாக ஆஷிமா நர்வால் நடிக்கிறார். கே.எஸ். ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுபோல நடிகை ஓவியாவும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதோடு, ஆரவ் உடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார்.
`ராஜ பீமா' திரைப்படத்தில் யானைக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மனித விலங்கு முரண் பேசப்பட்டுள்ளது .
படம் குறித்து இயக்குநர் நரேஷ் சம்பத் பேசும் போது, " பல்வேறு இடங்களில், குறிப்பாக அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பை நடத்தியது மிகப்பெரிய சவாலாக இருந்தது.
சில விஷயங்களை கதையில் எழுதும்போது நன்றாக இருந்தது, ஆனால் படப்பிடிப்பில் எதிர்பாராத அனுபவங்களை சந்தித்தது. தாண்ட முடியாத பெரிய தடைகளாக இருந்தது. குறிப்பாக, யானையுடன் நடித்த நாயகன் ஆரவ்விற்கு இது கடினமாக இருந்தது.
அவர் படப்பிடிப்புக்கு முன்பே யானையுடன் நட்பாக இருந்த போதிலும், படப்பிடிப்பில் முற்றிலும் எதிர்பாராத விஷயங்கள் இடம்பெற்றது . காடுகளில் வழுக்கும் பாறைகள் மற்றும் தரைகள் இன்னொரு தடங்கலாக இருந்தது.
இருப்பினும், படப்பிடிப்பை சிறப்பாக முடித்து விட்டு வந்திருக்கிறோம் " என்றார்