8வது இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரின் இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பை ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை இன்டியன்ஸ் அணி பெற்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற சென்னை சுப்பர் சிங்ஸ் அணியுடனான போட்டியில் 25 ஓட்டங்களால் வெற்றிபெற்றதன் மூலம் மும்பை இந்த வாய்ப்பை பெற்றது.
மும்பை வெண்கடே மைத்தானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்த நிலையில், 187 ஒட்டங்களை பெற்றுள்ளது.
பதிலளித்த சென்னை அணி, 19 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்த நிலையில் 162 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.
இதனிடையே, இன்று இடம்பெறவுள்ள போட்டியில், பெங்களுர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணியும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் பங்கேற்கின்றன.
இந்த போட்டி புனேயில் இடம்பெறவுள்ளது.
இதில் தோல்வி அடையும் அணி போட்டியை விட்டு வெளியேறிவிடும்.
வெற்றி பெறும் அணி, எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறும் 2வது தகுதி சுற்றில் சென்னை அணியை சந்திக்கும்.
அதில் வெற்றிபெறும் அணியே கொல்கத்தாவில் எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறும் இறுதி போட்டியில் முன்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.
