நீர் வாழ் பிராணிகளை வளர்க்கும் ஒரு அழகான பூங்காவில், கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக, தனிமையிலே ,கவலையாக வாழ்ந்த தவளைக்கு, ஜோடி கிடைத்துள்ளதாம்.
தவளையார் மிகவும் உற்சாகமாகவும் சநதோஷமாகவும் இருக்கிறாராம்.
ரோமியோ என செல்லமாக அழைக்கப்பட்ட , சேவீன்கஸ் நீர் தவளையானது, இத்தனை ஆண்டுகளாக, இந்த உலகில் தனித்து வாழும் தனித் தவளை இனமாகக் கருதப்பட்டது.
இந்த நிலையில், பொலிவியன் காட்டில், அதற்கு ஒரு துணையை, ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.ஜூலியட் எனவும் பெயரிடப்பட்டுள்ளதாம்.