ஓராண்டு காலம் விண்வெளியில் தங்கியிருந்து, சாதனை படைக்க அமெரிக்க வீராங்கனை ஒருவர் தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து, விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையம் ஒன்றை பிரம்மாண்டமான முறையில் அமைத்துள்ளன. அந்த மையத்தில் 6 வீரர்கள் தங்கி இருந்து, தீவிர ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அவர்களில் 3 அல்லது 5 பேர், சுமார் 6 மாதங்கள் கழிந்ததும், மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள். அதன்பின்னர் புதிதாக 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸ் சார்பில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சாண்டர், இத்தாலியை சேர்ந்த லூகா பர்மிடானோ ஆகிய 2 வீரர்களும், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டீனா கூக் என்ற வீராங்கனையும் எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதி, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
இவர்களில் கிறிஸ்டீனா கூக், விண்வெளியில் ஓராண்டு காலம் தங்கி இருந்து சாதனை படைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன், அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீராங்கனை பெக்கிவிட்சன், அதிகபட்சமாக 289 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்து வரலாற்றில் இடம் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.