Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
18
வாக்களிக்க வந்தார் தல ; கூடிய கூட்டத்தால் பரபரப்பு

SooriyanFM Gossip - வாக்களிக்க வந்தார் தல ; கூடிய கூட்டத்தால் பரபரப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,114 Views
சென்னை திருவான்மியூரில் தல அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார். ரசிகர்கள் கூடியதால் அவர் வரிசையில் நிற்காமல் உடனடியாக வாக்களித்து விட்டுச் சென்றுள்ளார்.


நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்டமாக 91 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 11-ம் திகதி தேர்தல் நடந்தது. 

இரண்டாம் கட்ட தேர்தல் 95 தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது.

தமிழகத் தில் உள்ள 39 தொகுதிகள், புதுச் சேரியில் ஒரு தொகுதி என 40 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

இத்துடன், தமிழகத்தில் இடைவெளியாகவுள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தமிழகம், புதுச்சேரியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வாக்களித்தார்.

அவர் அங்கு வந்திருந்ததை அறிந்து ரசிகர்கள் அவரைப் பார்க்கக் கூடியதால் லேசான சலசலப்பு ஏற்பட்டது. சிலர் அத்துமீறி வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்றனர்.

இதனால், வரிசையில் நிற்காமல் போலீஸ் பாதுகாப்புடன் வாக்களித்தனர். தென் சென்னை மக்களவைத் தொகுதியில் வாக்களித்துள்ளார்.

இதே போல இன்னும் பல பிரபலங்களும் தமது வாக்குகளை வழங்கிவிட்டு, புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top