தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவும், தேசிய விருது பெற்ற நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான தனுஷும் விரைவில் இணைந்து ஒரு படம் உருவாக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் கசிந்தன. தற்போது இந்த செய்தியை இரு தரப்பினர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சமீபத்தில் ஒரு திரைப்படவிழாவில் தனுஷை வைத்து நீங்கள் படம் இயக்கவிருப்பது உண்மையா? என்ற கேட்ட கேள்விக்கு பதிலளித்த பாலா, "தனுஷ் போன்ற நடிகர்கள் கோலிவுட்டுக்கு மட்டும் சொந்தமில்லை. அவர் ஒரு அகில இந்திய நடிகர். அவருடன் இணைந்து பணிபுரிய ஆவலுடனும், அதற்கான நேரத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.
பாலாவின் கருத்தை கேள்விப்பட்ட தனுஷ் 'பாலா அவர்களுடைய இயக்கத்தில் நடிக்க, அவர் எப்போது கூப்பிட்டாலும் நான் தயாராக இருக்கின்றேன்' என்று கூறியுள்ளார். பாலா தனது தாரை தப்பட்டை' படத்தை முடித்தவுடன் தனுஷுடன் இணைவார் என கூறப்படுகிறது.
தேசிய விருது பெற்ற இரு கலைஞர்கள் இணைந்தால், நிச்சயம் இன்னொரு தேசிய விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் கூறப்பட்டு வருகிறது.
-கோடம்பாக்கக் குருவி-