சினிமாவில் முதன் முதலில் நடிகைக்காக கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் சென்றது என்றால், அது நடிகை குஷ்பூவிற்கு தான். 1980, 90 என இருபது ஆண்டுகளாக ரசிகர்கள் அத்தனை பேரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் நடிகை குஷ்பூ.
குழந்தைப் பருவத்தில் இந்தியில் அறிமுகமான இவர், பிறகு தென்னிந்திய வெள்ளித்திரை மாத்திரமல்லாது, சின்னத்திரையிலும் தனது காலடித் தடத்தை பதித்து புகழ் பெற்றுள்ளார். மேலும் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சில படங்களையும் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை குஷ்பூ சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் எடுத்து கொண்ட முதல் புகைப்படம், தற்போது வெளியாகி ரசிகர்ளை மகிழ்ச்சிபடுத்தியுள்ளது.