கொள்ளையர்கள் பொதுவாகவே தான் கொள்ளையடிக்கச் செல்லும் இடத்திற்கு, முகத்தை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக, முகமூடி அணிந்து கொள்வார்கள்.
அத்துடன் தம்மை அடையாளம் காணாதவாறு, எந்தத் தடயங்களையும் விட்டுச் செல்லக்கூடாது என்பதில், கொள்ளையர்கள் மிகுந்த அவதானத்துடன் இருப்பார்கள்.
இந்த நிலையில் அவுஸ்திரேலியாவின் ஸ்ட்ராத்பைன் என்ற பகுதியில் உள்ள பிரபல்யமான கடிகாரக் கடையொன்றில் கொள்ளையடிக்கச் சென்ற திருடன் ஒருவன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முகமூடியை அணிந்து கொண்டு அங்கிருந்த விலை உயர்ந்த கடிகாரங்களைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அந்தக் கடையின் உரிமையளார் காவல்துறையினருக்கு தகவல் வழங்கினார். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கடையில் இருந்த கண்காணிபுக் கெமராக்களில் பதிவான காட்சிகளைப் பார்த்தனர்.
அதில் திருடன் தன்னை யாரும் பார்க்கக் கூடாது என்பதற்காக, அமெரிக்க அதிபர் முகமூடியை அணிந்து வந்து கொள்ளையடித்தமை பதிவாகியுள்ளது.
அந்த காட்சியைப் பார்த்த காவல்துறையினர் பெரும் பதற்றமடைந்தனர். இந்த நிலையில் குறித்த கொள்ளையனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.