உலகளவில் பெருமளவு பேசப்பட்ட, வசூல் சாதனைப் படைத்த அவதார் திரைப்படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும்? என்பது குறித்து, தற்போது இயக்குனர் ஜேம்ஸ் கெமரூன் தகவல் வெளியிட்டுள்ளார்.
டைட்டானிக் படத்தின் மூலம் உலகளவில் பாரிய வரவேற்பைப் பெற்ற ஜேம்ஸ் கெமரூன், அவதார் திரைப்படத்தை கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்த படமும் பெரும் வசூலை ஈட்டிய நிலையில், அதன் அடுத்த பாகத்தை பார்க்க, ரசிகர்கள் பலத்த எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.
இந்த நிலையில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு, அவதார் திரைப்படத்தின் பாகம் இரண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி அவதார் திரைப்படத்தின் பாகம் இரண்டு வெளியாகும் என, இயக்குனர் ஜேம்ஸ் கெமரூன் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவதார் படத்தின் 3 ஆம் பாகம், 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் திகதியும், அவதார் திரைப்படத்தின் 4 ஆம் பாகம், 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதியும், அவதார் படத்தின் 5 ஆம் பாகம், 2027 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் திகதியும் வெளியாகும் என, ஜேம்ஸ் கெமரூன் அறிவித்துள்ளார்.