நடிகர் சிவகார்த்திகேயனுடன் 'லேடி சூப்பர்ஸ்டார்' நயன்தாரா ஜோடி போட, எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் "மிஸ்டர் லோக்கல்" திரைப்படம் வெகு விரைவில் திரைகாணவுள்ளது.
காதலும் கொமெடியும் கலந்த காட்சியமைப்புடன் வெளியீட்டிற்கு தயாராகவுள்ள இந்த "மிஸ்டர் லோக்கல்" திரைப்படத்தில் யோகிபாபு, தம்பி ராமையா, ராதிகா சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல பிரபல நடிகர் பட்டாளம் இணைந்துள்ள நிலையில், படத்திற்கான இசையை 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி வழங்கியிருக்கின்றார். 'ஸ்டூடியோ கிரீன்' தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் எதிர்வரும் 17ம் திகதி வெள்ளித்திரையில் மின்னவிருக்கின்றார் "மிஸ்டர் லோக்கல்" என்று படக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளதோடு, திரைப்படத் தணிக்கைக் குழுவினரும் `U' சான்றிதழ் கொடுத்துள்ளனராம். இதனால், குடும்பத்தோடு சேர்ந்து மக்கள் படம் பார்க்க வருவார்கள் என்ற சந்தோசத்தில் படக்குழுவினர் காணப்படுகின்றனர்.