பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங் (Lotay Tshering ), வார இறுதியான சனிக்கிழமைகளில் வைத்தியாராக பணியாற்றி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் சனிக்கிழமைகளில் மருத்துவமனைக்கு சென்று, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்,கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பூட்டானின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். வைத்தியரான இவர், நாட்டின் பிரதமரான பின்னரும் தொடர்ந்தும் வைத்தியசாலைக்குச் சென்று நோயாளர்களை பார்வையிட்டு வருகின்றார்.
இந்நிலையில் பிரதமர் லோட்டே ஷெரிங் சனிக்கிழமைகளில் அந்நாட்டின், ஜிக்மி டோர்ஜி வாங்ஜூக் (Jigme Dorji Wangchuck ) தேசிய மருத்துவமனையில் வைத்தியராக பணியாற்றி வருகிறார்.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமன்றி, அறுவை சிகிச்சைகளையும் செய்துள்ளதாக குறித்த ஆங்கில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.