2014 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில்,அஜித் நடித்த 'வீரம்' மற்றும் விஜய் நடித்த 'ஜில்லா' ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியானது.
இதனையடுத்து வரும் 2020ஆம் ஆண்டு, அஜித், விஜய் படங்கள், ஒரே நாளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக, இப்போது பரவலாகப் பேசப்படுகிறது.
தற்போது நம்ம தல அஜித் நடித்து முடித்துள்ள 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம், ஆகஸ்ட் 10ஆம் திகதி வரவுள்ள நிலையில், தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இந்த நிலையில்த் தான், அஜித்தின் அடுத்த திரைப்படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளார்.அதேபோல் விஜய்யின் அடுத்த படத்தை 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.இந்த இரண்டு திரைப்படங்களும் 2020 கோடை விடுமுறைக்கு வெளியிட இரு குழுக்களும் தீர்மானித்துள்ளதாகத் தகவல்.
பார்க்கலாம்... அவ்வாறு வெளிவந்தால், தல தளபதி ரசிகர்களுக்கு, பெரும் உற்சாகமும் கொண்டாட்டமும் சேர்ந்து களைகட்டும் என்பது தான் உண்மை.