ஃபார்முலா-1 கார் பந்தய வீரர் நிக்கி லாடா (Niki Lauda), உடல்நலக்குறைவால் தனது 70 வது வயதில் இன்று காலமானார். ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரரான இவர், மூன்று முறை ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
கடந்த1976-ஆம் ஆண்டு நேர்ந்த விபத்திற்கு பின்னர், தொடர்ந்தும் இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இருப்பினும் முறையான மருத்துவ சிகிச்சைகளுக்கு பின்னர், மீண்டும் ஆரோக்கியம் பெற்ற இவர் ஃபார்முலா 1 கார் பந்தய போட்டிகளில் பங்கேற்று, 1977, 1984 ஆகிய ஆண்டுகளில் ஃபார்முலா 1 சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இந்தநிலையில் முதுமையில் இருந்த இவர், மீண்டும் இந்த வருடமும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.