அந்தமானில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை நேரப்படி, நேற்று நள்ளிரவு 12.40 அளவில், இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் எந்த வித பாரிய சேதங்களும் ஏற்படவில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அங்குள்ள கட்டிடங்கள் மிதமாக அதிர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே குறித்த நிலநடுக்கத்தை அடுத்து, அந்தமானில் உள்ள மக்கள், பெரும் பீதியில் உறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.