பாகிஸ்தானில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு, HIV தொற்று
SooriyanFM Gossip - பாகிஸ்தானில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு, HIV தொற்றுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
பாகிஸ்தானிலுள்ள ஏராளமான பச்சிளம் குழந்தைகள் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை, தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
முதல் முதலாக பெப்ரவரி மாதம் தென் பாகிஸ்தானில் உள்ள, ஒரு குழந்தை தீவிர காய்ச்சலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏராளமான குழந்தைகள் தீவிர காய்ச்சலின் காரணமாக அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
குழந்தைகளின் தொடர் காய்ச்சல் குறித்து குழப்பமடைந்த மருத்துவர் இம்ரான் ஆர்பானி, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் ஏராளமானவர்களுக்கு எச்.ஐ.வி நோய் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதாக தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 24ம் திகதி வரை ஒரு சிறு கிராமத்தில் மட்டும் 15 குழந்தைகள் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து சிந்து மாகாணத்தில் தீவிர காய்ச்சலில் பாதிக்கப்பட்ட பலரிடம் மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையின் போது, ஏராளமான குழந்தைகளுக்கு எச்.ஐ.வி இருப்பது தெரியவந்துள்ளது என, மருத்துவர் கூறியுள்ளார்.