குருஷேத்திரா திரைப்படத்தில் புன்னகை இளவரசி சினேகா, திரௌபதியாக அவதாரம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அர்ஜுன் இந்த படத்தில் கர்ணனாக நடித்துள்ளார்.
இந்த படத்தை பிரபல கன்னட இயக்குனர் நாகன்னா இயக்கியுள்ள நிலையில், தற்போது இந்த படத்திற்கான டீசர் வெளியாகியுள்ளது.
மகாபாரத புராணத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படம், மிகப்பெரும் செலவில் தயாராகி வருகின்றது.
துரியோதனனை கதாநாயகனாகக் காட்டும் இந்த படத்தில், தர்ஷன் துரியோதனனாக நடித்துள்ளார். அத்துடன் வி.ரவிச்சந்திரன் கிருஷ்ணராகவும், அம்பரீஷ் பீஷ்மராகவும், சோனு சூத் அர்ஜுனனாகவும் நடித்துள்ளனர்.
இந்த படம் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.