அதிகமாக உணவருந்தினால் தூக்கம் வரும் இதற்கான காரணம் எத்தைப்பேருக்கு காரணம் தெரியும். மனித உடலில் உள்ள 5 லீட்டர் ரத்தம்மானது ஒக்சிஜனையும் சத்துக்களையும் நம் உடல் உறுப்புகளுக்கு கொண்டு செல்வதுதே அதன் வேலையாகும்.
ஒவ்வொரு அங்கத்திற்கும் வெவ்வேறு அளவிலேயே ரத்தம் கடத்தப்படும். சாதாரண நிலையில் இதயத்தில் இருந்து வெளியேற்றப்படும் மொத்த ரத்தத்தில் 28 சதவீதம் கல்லீரலுக்கும், 24 சதவீதம் தசைகளுக்கும், 15 சதவீதம் மூளைக்கும், மீதமுள்ள ரத்தம் மற்ற உறுப்புகளுக்கும் செல்கிறது. நாம் அதிகமான உணவு உண்டபின் அவ்வுணவை சமிபாடு அடைய செய்ய, அதிகளவு ரத்தம் வயிற்றுப்பகுதிக்கு செல்லும் இதனால் மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறைந்து மூளையின் செயல்பாடு குறைந்து தூக்கம் வருகிறது.