நடிகர் சிம்புவுக்கு திருமணம் நடக்கவிருப்பதாகவும்,அவருக்குச் சரியான,பொருத்தமான பெண்ணை தாங்கள் பார்த்து கொண்டிருப்பதாகவும் டி.ராஜேந்தர் அண்மையில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சிம்புவின் தாயார் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாகவும்,உறவுக்கார பெண் என்பதோடு, ஆகஸ்ட் மாதம் திருமணம் நடக்கவிருப்பதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், சிம்பு, விரைவில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், 'மாநாடு' எனும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.