வினோத் இயக்கும்,தல அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், அடுத்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
'தல 60' என அழைக்கப்படும் இந்தப் படத்தையும் எச்.வினோத் இயக்கவுள்ளார் என்பது நாம் அறிந்த விடயம்.
இந்த நிலையில் 'தல 60' படத்திற்காக, அஜித்திடம் இயக்குனர் வினோத் இரண்டு கதைகளை கூறியுள்ளாராம். ஒன்று அரசியல்ப் பின்னணி, மற்றையது சமுதாய பிரச்சனைக்கு தீர்வு அளிப்பது சம்மந்தமான கதை. இந்த இரண்டில், அரசியல்க் கதை வேண்டாம், சமுதாய பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் கதையை தேர்வு செய்வதாக தல கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
கடந்த நான்கு படங்களில் உடல் எடை கூடி இருந்த நம்ம தல, இப்போது உடல் எடை குறைந்து, இன்னும் அழகாக மாறியுள்ளாராம்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் என்றும் திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.