‘நாய்கள் ஜாக்கிரதை’ வெற்றிக்குப் பிறகு சிபிராஜ் நடிக்க இருக்கும் படம் ‘ஜாக்சன் துரை’. இப்படத்தை ‘பர்மா’ படத்தை இயக்கிய தரணிதரன் இயக்குகிறார். இப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார். மேலும் சத்யராஜ், கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கிய வேடத்தில் ஹாலிவுட் நடிகர் ஷாசெரி (ZACHERY) தமிழுக்கு அறிமுகமாகிறார்.
யுவராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கவுள்ளார். இப்படத்தை ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.எஸ். சரவணன் அதிக பொருள் செலவில் பிரமாண்டமாக தயாரித்து வழங்கவுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
ஜாக்சன் துரை திகிலும், நகைச்சுவையும் கலந்த படமாக உருவாகிறது. இது தமிழில் உருவாகும் முதல் பீரியாடிக்கல் (PERIODICAL) பேய் படம் என்று கூறப்படுகிறது. மேலும் ஹாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘கான்சூரிங்’ படத்தின் ஒப்பனை தொழில்நுட்பம் இப்படத்தில் பயன்படுத்தப்படுகிறது. இப்படத்தின் கதை, திரைக்கதை 1940-ல் நடப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளதால் மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெறுகிறது.
கோடம்பாக்கக் குருவி-