ஜாக்கி சானை தெரியாதோர் யாரும் இருந்தால் அது உலக அதிசயம்..
சாகச சண்டைத் திரைப்பட பிரியர்கள் முதல், சின்னக் குழந்தைகள் வரை அனைவரும் அறிந்த ஹோலிவூட் நட்சத்திரம் ஜக்கி.
இவரின் மகனான 32 வயதுடைய ஜெய்சி சான் திரைபடங்கள் மற்றும் தொலைகாட்சி தொடர்களில் நடிப்பவர். இவர் தனது இல்லத்தில் போதை பொருள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுக்கமைய சீன பொலீஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு இவரது நண்பரான 23 வயதுடைய கை கோ சென்னும் கைது செய்யப்பபட்டுள்ளார்.
இவர் கைது செய்யப்படுள்ள தகவல் இன்னும் வெளிவராத நிலையில், சோதனையின் போது ஜெய்சி சானின் வீட்டிலிருந்து 100 கிராம் எடை கொண்ட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. மேலும் இவர்களுக்கு போதை பொருட்களை விற்க முயற்சி செய்த நபரும் கைது செய்யப்பட்டுளார்.
ம்.... அப்பா எப்படி பிரபலமாக, மகன் எப்படி பிரபலமாகிறார் என பாருங்க.