பருவநிலை காரணமாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் குதிரைகளினுடைய எடை பருவ நிலை மாற்றத்தால் அதிகரித்து வருவதாக பிரிட்டனில் உள்ள கால்நடை சேவைகள் மைய இயக்குனர் ஜில்லிஸ் மொபட் தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றத்தால் மழை மற்றும் வெயில் அதிகரிக்கிறது. இதனால் புற்கள் அதிகளவில் வளர்கின்றன. புற்கள் அதிகமாக கிடைப்பதால் குதிரைகள் தன் தேவைக்கு அதிகமான அளவில் உட்கொள்கிறது. இதனால் அதன் எடை அதிகரிக்கிறது. உரிமையாளர்களும் குதிரைகள் சாப்பிடும் அளவை எந்நேரமும் கண்காணிப்பது கடினம்.