ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ரோமியோ ஜூலியட்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது. ஏற்கனவே "டண்டனக்கா" உள்பட அனைத்து பாடல்களும் ஹிட் ஆகியுள்ளதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயம் ரவி, ஹன்சிகா, வம்சி கிருஷ்ணா, பூனம் பாஜ்வா, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை லக்ஷ்மண் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஆர்யா தனது நண்பர்களின் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருவது தெரிந்ததே. இந்நிலையில் ஆர்யா, விஷால், விஷ்ணு ஆகிய மூவரும் 'தாக்க தாக்க' என்னும் ஒரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். இந்த பாடல் நாளை வெளியாகும் 'ரோமியோ ஜுலியட்' படத்துடன் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
எனவே நாளை வெளியாகும் 'ரோமியோ ஜூலியட்' படத்தை பார்ப்பவர்களுக்கு ஆர்யாவின் இரண்டு சிறப்புத் தோற்ற காட்சிகளை கண்டுகளிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ராந்த் ஹீரோவாக நடித்துள்ள 'தாக்க தாக்க' படத்தை சஞ்சீவ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறவுள்ளது. மேலும் இந்த படத்தை உலகம் முழுவதும் கலைப்புலி இண்டர்நேஷனல் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-கோடம்பாக்கக் குருவி-