மறைந்தாலும் மறையாத மணம் ....அதிசயம் ஆனால் உண்மை
Perfume saleswoman bottles dead relatives' body odour to keep their memory alive - மறைந்தாலும் மறையாத மணம் ....அதிசயம் ஆனால் உண்மைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
உயிர் துறந்தோரின் உடல் மணத்தை நுகர்ந்து அவர்களின் நினைவில் வாழ இதோ ஓர் வரம் ...ஆசையா வெறும் 500 பவுண்ட்ஸ் தான் ...
ஆம் !! பிரான்சிய நிறுவனம் ஒன்று பிரிந்தோரின் நினைவுகளை மறவாது நினைத்திருக்க புதியதோர் வரத்தினை தருகிறது ...அது என்ன வரம் என்று அறிந்து நீங்களும் அதனை அடைவதற்கு தவம் இருக்க முயற்சிக்கலாம் ..ஆனாலும் அந்த வரத்தினை நீங்கள் பெற்றிட செலுத்தவேண்டியது வெறும் 500 பவுண்ட்சுகள் தான்... ஆம் அந்நிறுவனம் ஒருவரின் தனித்துவ உடல் மனதினை வாசனை திரவியமாக்கி உங்கள் கரங்களில் ஒப்படைத்து விடுகிறது ..அதன் பின் அவ்வாசனை திரவியத்தை அடித்து பார்த்து உங்களை விட்டு பிரிந்து சென்றவர்களை காலம் முழுவதும் நீங்கள் நினைத்து பார்க்கலாம் ....
இத்திட்டத்தின் பிரதானியாக பின் நின்று உழைத்தவர் காப்புறுதி நிறுவனமொன்றில் முகவராக கடமையாற்றும் ஓர் பெண்...இவ் யோசனை அவர் மனதில் உதிக்கக் காரணம் அவரின் தாயார் ..ஆம்! அவரது தாயார் இறந்து போன அவர் கணவரின் நினைவுகளை மீட்டி பார்பதற்காய் அவர் பாவித்த தலையனையினை பத்திரப்படுத்தி வைத்திருப்பதை அவதானித்த குறித்த பெண் இது போன்ற மோப்ப நுகர்வு முறையினை இன்னுமோர் படிநிலைக்கு கொண்டு செல்வதற்கு தீர்மானித்தார் ..அதன் பிரகாரம் அவர் மனதில் உதித்த திட்டமே இந்த மனித மணத்தினை அடிப்படையாகக் கொண்ட வாசனை திரவியத் திட்டம் ..
எனினும் இத்திட்டத்திற்கு செயலுரு கொடுக்க முயலுகையில் இப்பெண் பாரிய சவால்களை சமாளித்தார் ..எனவே மனித உடல் மணத்தினை மீள் உருவாக்கிட ஹார்வரே பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகளை அணுகினார் அவர்களின் உதவியுடன் இறந்த மனிதரின் ஆடை மூலக்கூறுகளை 4 நாட்கள் வடிநிலை செயன்முறைக்கு உற்படுத்தி இந்த வாசனை திரவியம் உருவாக்கப்படுகிறது ...இந்த வாசனை திரவியமானது இறந்த ஒருவரின் நிழல்படங்கள் வீடியோக்கள் தந்திடும் ஆறுதலை விட அதிகளவு ஆறுதலை அளிப்பதாக குறித்த பெண் தெரிவிக்கின்றார் ..
குறித்த வாசனை திரவிய உற்பத்தியினை இந்த வருடத்தின் கடைசிப் பகுதியில் பாரிய மருந்தாக்க நிறுவனங்களோடு இணைந்து உற்பத்தி செய்திட குறித்த பெண் முயன்று வருகிறார் ..ஆனாலும் இந்த வாசனை திரவியத்தின் விலை தான் சற்று அதிகம் ..ஆம் இதன் விலை 500 பவுண்ஸ்கள் ...எமது நாட்டின் பெறுமதியில் சுமார் ஒரு லட்சம் ரூபா ...தலை சுற்றுகிறதா? ..இருப்பினும் இறந்தவரின் நினைவுகளை இறவாது வைத்திட எவ்வளவு செலவு செய்தாலும் தகும் தானே !!!