சிக்கலுக்கு மேல சிக்கல் எண்டா அது நம்ம தமிழ்சினிமாவில தான் எண்டு சொல்லணும்.இப்போ கொஞ்சநாளாகவே இளையதளபதி விஜய்க்கு சனியன் பனியனுக்குள்ள சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கு எண்டு தான் சொல்லலாம். அந்த அளவுக்கு பிரச்சனைகளுக்குள் மாட்டித் தவிக்கிறார் இளையதளபதி....
இயக்குனர் சங்கர் இயக்க, ஒஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கும் விக்ரமின் "ஐ" திரைப்பட trailer நேற்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டதல்ல. இந்த திரைப்பட யூனிட்டில் வேலை பார்க்கும் ஒருவரின் கைங்கரியத்தில் வெளியானது தான் அது. இதனால் கடுப்பாகிப்போன தயாரிப்பாளர் ஒஸ்கார் ரவிச்சந்திரன் அந்த யூனிட்ஆளை தனது அலுவலகத்தில் வைத்து,வாய்க்கு வந்தபடி திட்டி, சரமாரியாக தாக்கியிருக்கிறார் அத்தோடு, யாருக்கும் பயந்தவன் நானில்லை, முதல்வர் ஜெயலலிதாகிட்ட வேணும்னாலும் போய் சொல்லு, நீ ஒண்ணும் எனக்கு பெரிய ஆள் கிடையாது எண்டும் சொல்லியிருக்கிறார்.
அந்தவேளையில் தான் முக்கியமான விசயமொன்றையும் கக்கியிருக்கிறார், தயாரிப்பாளர் ஒஸ்கார் ரவிச்சந்திரன். "இளையதளபதி விஜய் கூட 15 கோடி ரூபாய் எனக்கு கொடுக்கணும், ஆனா அந்த பணத்தை திருப்பி தராமல் என் கண்ணில் சிக்காமல் ஒளிந்து திரிகிறார். தீபாவளிக்கு அவர் நடிச்ச கத்தி திரைப்படத்தை வெளியிட இருக்கிறாராம், என் பணத்தை திருப்பி கொடுக்காமல் எப்படி படத்தை திரையிடுவார்னு நானும் பார்க்கிறேன்" என விஜய்க்கு சவால் விட்டிருக்கிறார் தயாரிப்பாளர் ஒஸ்கார் ரவிச்சந்திரன்.

இந்தக் கதையை twitter இல் ஒருவர் அவிழ்த்துவிட அவ்வளவு தான் #VijayRanAwayWith15crores என்ற hashtag உடன் வெளுத்து வாங்கிடத் தொடங்கிவிட்டார்கள் இணைய சிகாமணிகள்.
பதிலுக்கு விஜய் ரசிகர்கள் #KATHTHIArrivesOnDiwali என்று தங்கள் தங்கள் கச்சேரியை ஆரம்பித்திருந்தார்கள்.
எனினும் இதுவரை எந்தவொரு உறுதிபட்ட அறிக்கையும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் பக்கமிருந்தோ, விஜய் பக்கமிருந்தோ வரவில்லை.
விஜய் ரசிகர்களின் ஆத்திரமும் அடக்கமுடியாத கோபமும் சமூக வலைத்தளங்களில் கனன்றுகொண்டிருக்கிறது.
மறுபக்கம் நேற்று கத்தி கதை தனது கதை என்றும் இயக்குனர் முருகதாஸ் அதைச் சுட்டு விட்டதாகவும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் வழக்குத் தாக்கல் செய்த கதையும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது.
#பட்ட காலில தான் படும்னு பழமொழி சொல்லுவாங்க... கத்திக்கு சோதனை மேல சோதனை தான். இளையதளபதியின் கத்திக்காக, ரசிகர்கள் ஒஸ்கார் ரவிச்சந்திரனுக்கெதிராக கத்தி தூக்குவார்களா.....? இல்லையா...? பொறுத்திருந்து பார்க்கலாம்.