இந்தியாவின் டெல்லியில் சமையல் எரிவாயு கொள்கலன் வெடித்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் பரிதாபமாகப் பலியான சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவத்தில் பலியானவர்களில், நான்கு சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் பிஜ்வாசன் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்துக்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டதுடன், பலியானவர்களின் உடலங்களும் மீட்கப்பட்டன.
அத்துடன் விபத்து குறித்த விசாரணைகளை இந்திய காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.