இந்த உலகத்தில் எல்லோருமே இருக்கிறதை விட்டுவிட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படுபவர்கள் தான்.
இதில் நடிகர்கள் மட்டும் விதி விலக்கா...?
ஆசைப்படுவது தப்பில்லை தான்,ஆனால் அவஸ்தையும் படணுமே.
ஹீரோவாக ஆசைப்பட்டுதான் இந்த அவஸ்தையில் சிக்கியிருக்கிறார் தமிழ்சினிமாவில் கொமெடியில் கொடிகட்டிய நடிகர் சந்தானம்.
சந்தானம் கொமெடியனாக இருந்தபோது வாய்ப்புகள் அவரது வாசல் கதவை தட்டின என்றால் மிகையாகாது. ஆனால், ஹீரோவாக ஆசைப்பட்டு இவர் எடுத்து புதிய அவதாரம் அவரை பாழும் கிணற்றில் தள்ளிவிட்டது.
தற்போது வாய்ப்புகள் எதுவுமே இல்லாமல் இருக்கும் இவர், தனது நெருங்கிய நண்பர்களான சக நடிகர்களிடம் இறங்கிப்போய் வாய்ப்பு கேட்டு வருகிறாராம். ஆனால், யாரும் அவருக்கு வாய்ப்புகள் தந்தபாடில்லையாம்.
தற்போது தனது இறுதி அஸ்திரமாக, தன்னுடன் அண்மையில் நெருக்கமான நண்பரும், ஹீரோவும், சேர்ந்து நடித்தவருமான உதயநிதியிடம் தேடிப் போய் இவர் வாய்ப்பு கேட்டிருக்கிறார்.இருந்தும்,
அவரும் தன்னுடைய அடுத்த படத்தில், கொமடியில் தனக்கொரு தனி இடத்தை பிடித்து வரும் நடிகர் "பரோட்டா சூரி" யை போட்டுவிட்டேன் என்று கூறி இவரை கழட்டி விட்டாராம் உதயநிதி.
இப்படி நண்பர்கள் எல்லாம் தன்னை கழட்டிவிட்ட சூழ்நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போயிருக்கிறார் நடிகர் சந்தானம்.
யாருக்கு எது வருமோ, அதைதானே செய்யணும்.இது புரியாமல் மனம் புண்ணாகிக்கிடக்கிறார் சந்தானம்.
அரிதாரம் பூசப்போய் அவஸ்தைப் படணுமா.....? திரையில் தான் கொமெடியன்னு பார்த்தா நிஜவாழ்விலுமா..