அப்பலோ 11 விண்ணோடத்தின் மூலம் நிலவுக்கு சென்ற நீல் ஆம்ஸ்ட்ரோங் மற்றும் எட்வின் ஒல்ட்ரின் ஆகியோர் நிலவில் காலடி வைத்து இன்றுடன் 46 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
அவர்கள் நிலவில் 21 மணித்தியாலங்கள் 36 நிமிடங்கள் சஞ்சரித்து பூமிக்கு திரும்பியிருந்தனர்.
நிலவில் காலடி பதித்த முதலாவது நாடு என பெறுமையை பெறவேண்டும் என்ற முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எப் கென்னடியின் கனவை நிறைவேற்றும் வகையில் இந்த பயணம் அமைந்திருந்தது.
1969 ஆம் ஆண்டு ஜுலை 16 ஆம் திகதி கேப் கெனவரல் விண்வெளி மையத்திலிருந்து புறப்பட்ட அப்பலோ 11 விண்வெளி வீரர்களின் மைக்கல் கொலின்ஸ் என்பவரும் உள்ளடங்குகிறார்.
இந்த பயணம் மனித வர்க்கத்தின் ஒரு மேம்பட்ட செயற்பாடாக இருந்தபோதும், நீல் ஆம்ஸ்ட்ரோகின் நிலவின் மீதான காலடி பதிப்பானது வரலாற்றில் முக்கிய சாதனையாக குறிப்பிடப்பட்டுள்ளது.