கலை கலாசார அமைச்சர் டி.பி ஏக்கநாயக்க கழன்ற சப்பாத்தை அணிந்து முக்கிய நிகழ்வொன்றில் கலந்து கொண்டது, பரபரப்பை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே.
அமைச்சரின் அடியில்லாத சப்பாத்து மர்மம் இப்போது இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் அமைச்சர் டி.பி ஏக்கநாயக்க
"அதாவது அன்று நிகழ்வுக்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் போது என்னுடைய ஆடைக்கு ஏற்ற வகையில் சப்பாத்தொன்று வீட்டிலிருந்தது, அதிலிருந்த சிலந்தி வலைகளை சுத்தம் செய்து விட்டு அணிந்து கொண்டு வந்தேன், நிகழ்வுக்கு வந்து இறங்கிய உடனே சப்பாத்துக்களின் அடிகள் கழன்றது, நானும் இரண்டையும் கழற்றிவிட்டு கிராமத்தில் செம்மண்ணில் கால் வைத்து நடப்பதை போன்று நடந்தேன்."
இது கெமாராவில் சிக்கியதில் அனைவருக்கும் தெரியவந்துவிட்டது எனறார்.
மேலும் 'கால் பாதம் நிலத்தில் பட நடந்து, ஜனாதிபதியையும் கண்டு அவருக்கு கைகொடுத்து, உரையாடி, இந்நிகழ்வில் கலந்து கொண்டதை நான் பெருமையாக கருதுகிறேன், இது சந்தோஷமாக உள்ளது' என்றார்.
என்னதான் இருந்தாலும் இவரின் சப்பாத்தின் அடிகழன்று, கால் வெளியே தெரிந்த விடயமானது இப்போது Talk of the Town ஆகவுள்ளது.