சீன அதிபர் இலங்கை வந்ததையடுத்து நேற்று முன்தினம், 27 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே, இத்தருணத்தில் ஒவ்வொரு அமைச்சர்களாக வந்து கையொப்பமிட்டுக்கொண்டிருக்கையில்,
இலங்கையின் கலை கலாசார அமைச்சரான டி. பி ஏக்கநாயக்க அவர்கள், ஏதோ அசௌகரியத்துக்கு முகம் கொடுப்பதை போன்று அங்கிருந்தவர்களுக்கு தோன்ற, சுற்றியிருந்த ஊடகவியலாளர்கள் கொஞ்சம் தேடிப்பார்த்துள்ளனர். அப்போது அவர்களின் கழுகுக் கெமராக் கண்களில் சிக்கிய ஒரு விடயமானது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், அவரின் கௌரவத்துக்கும் பங்கம் விளைவித்துள்ளது எனலாம்.
அப்படி என்னதான் நடந்தது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. முதலில் இந்த படங்களைப் பாருங்கள்.

படங்கள் நன்றி - Foreign Correspondents' Association of Sri Lanka
ஆம் அமைச்சர் டி. பி ஏக்கநாயக்க அவர்களின் சப்பாத்தின் அடி இவ்வாறு கழன்று கால் வெளியில் வந்திருந்தமையே இதற்குக் காரணம்.
இது இப்போது இணையத்தளங்களில் பரவலாக பேசப்படும் ஒரு விடயமாகவுள்ளது. லட்சக்கணக்கில் பணம் கொடுத்து சப்பாத்து வாங்கும் அமைச்சர்கள் மத்தியில், இப்படியும் ஒருவரா?
அல்லது ஏதாவது புதிய சப்பாத்து fashionஐ அமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளாரா என்ற சந்தேகமும் உள்ளது.