2,507 Views
கடத்தல் என பொய் கூறி கணவனிடமிருந்து கப்பம்பெற முயற்சித்த மனைவியொருவர் குளியாபிட்டிய பொலிஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த மனைவி தனது காதலனுடன் வைத்தே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஹெட்டிபொல பிரதேசத்தைச் சேர்ந்த அப் பெண் இரண்டு பிள்ளைகளின் தாயெனவும் நிறுவனமொன்றில் முகாமையாளராக இருப்பவரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர் இராணுவ வீரர் ஒருவருடன் திருமணத்துக்கு வெளியேயான தொடர்பொன்றை அவர் பேணி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது காதலனுடன் கஹடகஸ்திலிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு சென்று கணவனுக்கு அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது தான் கடத்தப்பட்டு விட்டதாகவும், தன்னை விடுவிக்க 5 இலட்சம் ரூபா கப்பம் கூறுவதாகவும் பொய் கூறியுள்ளார்.
இதன்பின்னர் கணவன் ஹெட்டிபொல பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து , அவர்கள் குளியாபிட்டிய பொலிஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து நடத்திய விசாரணை மற்றும் தேடுதல்களில் அப்பெண் மற்றும் அவரது காதலன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களின் உள் விவகாரமும் தெரியவந்துள்ளது.