Body found in Pettah - பயண பொதியில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் : அடையாளம் காண உதவி கோரப்படுகின்றதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
3,975 Views
பெஸ்டியன் மாவத்தை - தனியார் பேருந்து தரிப்பிடத்தின் அநுராதபுர பேருந்துகள் நிறுத்தும் இடத்தில், பயண பொதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட மனித சடலம் தொடர்பாக நீதவான் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளன.
குருதி உறைந்த நிலையில், சடலம் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனையின் பொருட்டு சடலம் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
இதேவேளை, புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து தரிப்பிட்டத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தை அடையாளங் காண்பதற்காக காவற்துறையினர் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த பெண்ணின் சில புகைப்படங்களை காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தது.
இதற்காக 011 2 3 23 677 - 011 2 66 23 11 மற்றும் 011 2 26 851 51 ஆகிய தொலைபேசி இலக்கங்களை காவற்துறையினர் வழங்கியுள்ளனர்.
குறித்த பெண்ணின் கழுத்தில் காணப்பட்ட தங்க சங்கிலி ஒன்றில் ஓம் என்று பொறிக்கப்பட்ட பென்டன் ஒன்று இருந்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்னர்.
அத்துடன் அவரது காலில் கொலுசு ஒன்றும் அணியப்பட்டிருந்தது