Kothena shooting at Ravi's men - கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டில் பலியான மற்றுமொருவர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
3,075 Views
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொருவர் மரணமானார்.
நேற்று அவர் மரணமானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு பலியானவர், கிரேன்பாஸ் பகுதியைச் சேர்ந்த 30 வயதானவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை, கொட்டாஞ்சேனை சாந்த பெனடிக் மைதானத்தின் அருகில், அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண்ணொருவர் பலியானார்.
சம்பவத்தில் காயமடைந்த மேலும் 5 பேர் தொடர்ந்தும் தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் இருவர் சத்திர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்தவமனை செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு சிகிச்சை பெற்று வரும் ஐந்து பேரில் இருவர் பெண்கள் என தெரிவிக்கப்படுகிறது.