Kothena shooting at Ravi's men - கொட்டாஞ்சேனை துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளனSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
3,419 Views
கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி கொட்டாஞ்சேனை ப்ளுமென்டல் பிரதேசத்தில் அமைச்சர் ரவீ கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் உட்பட மேலும் ஒருவர் பலியானதுடன் 11 பேர் காயமடைந்திருந்தனர்.
இதனிடையே, துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்காக சந்தேதகத்துக்குரியவர்கள் வருகை தந்த ஹைப்ரிட் ரக கறுப்பு நிறத்தையுடைய சிற்றூர்ந்து தற்போது அடையாளங் காணப்பட்டுள்ளது.
அந்த வாகனத்தின் இலக்கம் மற்றும் புகைப்படம் என்பவற்றை காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் கடந்த ஆறாம் திகதி புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்பாகவுள்ள வெளி வீதியில் வைத்து விதான கமகே அமில என்பவர் கைது செய்யப்பட்டதாக அந்த காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.