27,233 Views
அவர் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள ராலேவில் இருந்து விமானத்தில் பயணம் செய்துள்ளார். பயணத்தின் போது அவருக்கு அருகே இருந்த இருக்கையில் ஒரு இளம் காதல் ஜோடி இருந்துள்ளது. அந்த பயண நேரத்திலேயே அந்த காதல் ஜோடி விமானத்தில் உரையாடியதை கெல்லி அதை தனது டுவிட்டர் கணக்கின் ஊடாக நேரடியாக டுவிட் செய்துள்ளார்.
குறித்த ஜோடி தமது காதல் முறிவு தொடர்பிலேயே உரையாடிக்கொண்டிருந்துள்ளது. இதனையே அப்பெண் டுவிட் செய்துள்ளார்.
ஆண்: இது உண்மையில் ஆச்சரியம் அளிக்கும் ஒன்றா? இந்த தகவலால் நீ அதிக ஆச்சரியம் அடைகிறாயா?
ஆண்: எனக்கு கவலை இல்லை.
பெண்: உனக்கு கவலை இல்லை எனில் எனக்கு மகிழ்ச்சி.
பெண்: இதற்கு நான் தகுதியானவளா? இந்த விசயத்தை ஏன் கொண்டு வந்துள்ளாய்?
அந்த பெண் போல் இருக்க நான் விரும்பவில்லை. அவளாக இருக்க எனக்கு விருப்பமில்லை. உனக்காக எல்லா வகையிலும் உண்மையுடன் இருக்க நான் விரும்புகிறேன். நீ என்னை விட்டு விட கூடாது.
ஆண்: நீ அமைதியாக இரு.
பெண்: உண்மையில் இதனையே நான் நினைத்திருந்தேன். இது எப்படியேனும் நடந்து விட போகிறது என்று. இதை எனக்கு நீ செய்ய தொடங்கியிருக்கிறாய்? மெல்ல என்னை மறக்க முயற்சிக்கிறாய்? மற்றவர்களை போல?
சத்தத்துடன் அழுது புலம்புகிறார்...
பெண்: நீ பேசுவதை நிறுத்து. பேசுவதை நிறுத்து!!
நான் சார்லட்டிடம் கேட்க போகிறேன். நாம் வீட்டிற்கு சென்ற உடன் அவளிடம் கேட்க போகிறேன். உனது கதைகள் அவற்றுடன் ஒத்து போவதை நான் பார்க்க போகிறேன். (கடவுளே! சார்லட் யார்?)
ஆண்: இதை குறித்து இனி நான் பேச போவதில்லை.
பெண்: அதனால் என்னிடம் பேச உங்களுக்கு நேரம் இல்லை?
அமைதியுடன் அழுகிறார். மூக்கு சிந்துகிறார்.
சில நிமிடங்கள் அமைதி.