டிமான்ட்டி காலனி திரைப்படம் 2015ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த திரைப்படத்தினை அஜய் ஞானமுத்து இயக்கி இருந்தார்.
இத்திரைப்படத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.இந்த திரைப்படம் இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் முதல் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அதற்குப் பின்னர் இயக்குனர் அஜய் ஞானமுத்து இமைக்கா நொடிகள் திரைப்படத்தினை இயக்கினார்.இத்திரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர்.இதன் பின் பிறகு விக்ரமின் கோப்ரா திரைப்படத்தினை இயக்கினார்.மேலும் பல சிறந்த திரைப்படங்களை இயக்கினார்.
அந்தவகையில் தற்போது டிமான்ட்டி காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.