இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் ‘கர’ திரைப்படம் உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தில் நாயகியாக மமிதா பைஜுவும், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர். ‘கர' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.
‘கர’ திரைப்படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் போஸ்டர்களை படக்குழு பகிர்ந்து வருகிறது. பரதன் என்ற கதாபாத்திரத்தில் சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ளதாகவும் செல்லி என்ற கதாபாத்திரத்தில் மமிதா பைஜு நடித்துள்ளதாகவும் காசி மாயன் என்ற கதாபாத்திரத்தில் கருணாஸ் நடித்துள்ளதாகவும் படக்குழு போஸ்டர் வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், ‘கர’ திரைப்படத்தில் நடிகர் ப்ரித்வி பாண்டியராஜன் முருகேசன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதை படக்குழு தற்போது புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருக்கிறது .