எதிர்வரும் இரண்டு வருட காலப்பகுதியினுள் சிறுநீரக நோயாளர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான செயற்திட்டத்தை முன் எடுக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மெதிரிகிரிய - தலாகொலவௌ - ஸ்ரீ சுதர்ஷனாராம விகாரையில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
உலகின் சகல நாடுகளும்; தற்போதைய அரசாங்கத்துடன் சுமூக உறவை கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு வெளிநாடுகளின் உதவிகளை பெற்று கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் சிறுநீரக நோயை தடுக்க, கட்டுப்படுத்த மற்றும்; தேவையான நலன்புரி நடவடிக்கை தொடர்பில் உரிய தேசிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.