தேசிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சரவை அமைச்சர்களின் சத்தியபிரமாண நிகழ்வு இடம்பெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்படி, தேசிய கொள்கைகள், மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.
சுற்றுலா அபிவிருத்தி, மற்றும் கிறிஸ்த்தவ சமய விவகார அமைச்சராக, ஜோன் அமரதுங்க பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.
வன ஜீவராசிகள் துறை அமைச்சராக காமினி ஜெயவிக்ரமபெரேரா பதவி ஏற்றார்.
போக்குவரத்துத்துறை அமைச்சராக நிமால் சிறிபால டி சில்வா பதவி ஏற்றுக் கொண்டார்.
சமுக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சராக எஸ்.பி. திஸாநாயக்க பதவி ஏற்றுள்ளார்.
தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சராக டபிள்யு. டீ.ஜே செனேவிரத்ன பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.
பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராக லக்ஸ்மன் கிரியல்ல பதவி ஏற்றுள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக அனுரபிரியதர்ஷன யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில்நுட்பம், தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சராக சுசில் பிரேமஜெயந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சராக திலக் மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சராக ராஜித்த சேனாரத்ன பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.
நிதி அமைச்சராக ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சராக மகிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக வஜ்ரஅபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல்மாகாண அபிவிருத்தி அமைச்சராக எஸ்.பி.நாவின்ன தெரிவாகியுள்ளார்.
மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராக பாட்டலி சம்பிக்க ரணவக்க பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.
கடற்றொழில் மற்றும் நீர் வள அமைச்சராக மகிந்த அமரவீர பதவி ஏற்றார்.
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மின்சார மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளத்துறை அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.
கமத்தொழில் அமைச்சராக துமிந்த திஸாநாயக்க பதவி ஏற்றுள்ளார்.
நீதி அமைச்சரான விஜயதாஸ ராஜபக்ஷ பௌத்த விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பீ. ஹரிசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற புனரமைப்பு மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சராக கயந்த கருணாத்திலக்க பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.
வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டுள்ளார்.
துறைமுக மற்றும் கப்பல்த்துறை அமைச்சராக அர்ஜுன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
காணி அமைச்சராக எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுக அபிருத்தி அமைச்சராக பி. திகாம்பரம் பதவி ஏற்றார்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சந்திராணி பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சராக தலதா அத்துகோர பதவி ஏற்றுள்ளார்.
கல்வி அமைச்சராக அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.
புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்
கனியவள மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சராக சந்திம வீரக்கொடி
விளையாட்டுத்துறை அமைச்சராக தயாசிறி ஜெயசேகர
தெற்கு அபிவிருத்தி அமைச்சராக சாகல ரத்நாயக்க
தொலைத்தொடர்புகள் மற்றும் எண்மான உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சராக ஹரின் பெர்ணான்டோ.
தேசிய கலந்துரையாடல்கள் தொடர்பான அமைச்சராக மனோகணேசன்
ஆரம்ப கைத்தொழில் அமைச்சராக தயா கமகே
கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சராக றிசாட் பதியுதீன்.
நகர அபிவிருத்தி மற்றும் நீர்வடிகாலமைப்பு அமைச்சராக ரவுப்; ஹக்கீம்
அரச தொழில் முயற்சிகள் மற்றும் அபிவிருத்தி அமைச்சராக கபீர் ஹசீம் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
அஞ்சல் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சராக அமைச்சராக அப்துல் ஹலிம் பதவியேற்றார்.