8,698 Views
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடு கிராமத்தைச் சேர்ந்த அன்பு.ராஜசேகர் தாகபூமி என்ற குறும் படத்தை இயக்கி, தயாரித்து உள்ளார்.
இந்த படத்தின் மையக் கதையை திருடி நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருப்பதாகக் கூறி தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அன்பு.ராஜசேகர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மேலும், தஞ்சை முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், கத்தி திரைப்படத்தின் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் என 7 பேர் மீது குற்றவியல் வழக்கை அன்பு.ராஜசேகர் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.
இந்த வழக்கை நீதித்துறை விசாரணை செய்து நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ஒளிப்பதிவாளர் ஜோர்ஜ் வில்லியம், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், திரைப்பட தயாரிப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் நீலகண்ட நாராயணபூர் உள்பட 7 பேர் அடுத்த மாதம் 15 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும், உத்தரவு பிறப்பித்துள்ளார்.