நாள் தோறும் ஆர்வமும் திறமையும் உள்ள இலங்கை இளைஞர்கள் புதிது புதிதாய் பாடல்கள், குறும் படங்கள் என்று வெளியிடு தத்தம் அடையாளங்களை ஆழப் பதிக்கவும், புதிய எல்லைகளை உருவாக்கவும் முயன்ற வண்ணமே உள்ளார்கள்.
இவர்கள் உருவாக்கி சூரியனுக்கு அனுப்பி வைக்கும் படைப்புக்களில் தரமானவற்றை சூரியன் தனியான இடம் வழங்கி அறிமுகப்படுத்தி வந்திருக்கிறான்.
உள்ளூர்ப் பாடல்கள் பல அறிமுகமாகி இருக்கின்றன.
குறும்படங்கள் பல
http://sooriyanvideos.sooriyanfm.lk/ பகுதியில் வெளியாகியுள்ளன.
இவ்வாறு சில மாதங்களுக்கு முன்னர் சூரியனின் சூரிய ராகங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பாடல் தான் ஸ்ரீநாத்தின் Y.O.L.O.
அறிமுகமான நாளே பல சூரியன் நேயர்கள் இந்தப் பாடலின் புதுமையை ரசித்திருந்தார்கள்.
ஸ்ரீநாத் ராமலிங்கம் என்ற இந்தத் தேடல் நிறைந்த இளைஞருக்குக் கிடைத்த அங்கீகாரமாக தென்னிந்தியாவின் சன் டீவியில் Y.O.L.O கடந்த வாரம் ஒளிபரப்பாகியுள்ளது.
வாழ்த்துக்கள் ஸ்ரீநாத்.
இதே போல தரமும் புதுமையும் நிறைந்த புதிய படைப்புக்களை அடையாளப்படுத்தி அறிமுகப்படுத்த சூரியனும் காத்திருக்கிறான்.
இதோ ஸ்ரீநாத் சூரியன் பற்றியும் Y.O.L.O பற்றியும்...