சிக்குவாரா ஒல்லிபிச்சி அனிருத்...? – தாலியோடு அலைகிறது குடும்பம்.'வை திஸ் கொலைவெறி' பாடல் மூலம் மொழி கடந்து உலகெங்கும் இசை ரசிகர்களை தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். அதைவிட ஆன்ட்ரியாவுடன் நெருக்கம் காட்டிய புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியானதால் இன்னும் பிரபலமானவர், ஒல்லிக்குச்சி உடம்புக்காரரும் இசையமைப்பாளருமான அனிருத்.
'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த்தின் நெருங்கிய உறவுக்காரரான இவர், தற்போதைய நிலையில் தமிழ்த்திரையிசையில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து தமிழ்சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். இந்தநிலையில், இந்த ஒல்லிக்குச்சி இசை நாயகனுக்கு எப்படியாச்சும் ஒரு கல்யாணத்தை பண்ணிவைத்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களம் இறங்கியிருக்கிறார்களாம் குடும்பத்தினர்.
இது இப்படியிருக்க, இசையமைப்பதில் பிஸியாக இருக்கிறாரோ இல்லையோ,தினமும் இரவானால் பார்ட்டி, கேளிக்கை, களியாட்டம் என்று வெளியே சென்றுவிட்டு நள்ளிரவு கடந்துதான் வீடு திரும்புகிறாராம். அதுமட்டுமல்லாமல், இன்னும் 5வருடங்களுக்கு தனது கல்யாணம் பற்றி வீட்டில் யாரும் ஏதும் பேசக்கூடாது என்ற கட்டளையும் போட்டிருப்பதாகவும் கோடம்பாக்கம் சொல்கின்றது.
இந்தநிலையில், 'சூப்பர்ஸ்டார்' ரஜினி இந்த ஒல்லிபிச்சிக்கு நெருங்கிய உறவு என்பதால், அவரது பேச்சு இந்த ஒல்லிபிச்சியிடம் சில வேளைகளில் எடுபடக்கூடும் என்பதால் அவரை உதவிக்கு அழைத்திருக்கிறார்களாம் அனிருத் குடும்பத்தினர். அதற்கு ரஜினியோ "நான் அவரது கல்யாணம் பற்றி பேசி அதை அவர் ஏற்றுக்கொண்டால் எனக்கு சந்தோசம் தான்.சிலவேளைகளில் கேட்க மறுத்துவிட்டால் அது எனக்குத்தான் மனதில் ரொம்பவே தாக்கத்தை ஏற்படுத்திவிடும். இந்தக்காலத்து இளசுகள் யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள். அதனால் இந்தப் பிரச்சனையை நீங்க பார்த்துக்கொள்ளுங்கள்" என சொல்லி இந்தச் சிக்கலிலிருந்து ஒருவாறு தப்பித்துக் கொண்டாராம்.
நிலைமை இப்படியிருக்க, எப்படியும் கல்யாணத்தை நடத்தி முடித்தே தீருவது என்று கொலைவெறியோடு அலைய ஆரம்பித்திருக்கிறது அனிருத் குடும்பம். இந்த அவசரத்திற்கு காரணம் என்னவென்று கேட்டால் "முன்னர் இணையத்தளங்களில் வெளியான படங்கள் போல, இன்னும் எத்தனை புதிய படங்கள் வெளியாகுமோ என்ற பயம்தான்" என கூறும் ஒல்லிக்குச்சியின் பெற்றோர், பெண் தேடி ஆலாய் பறக்க ஆரம்பித்திருக்கிறார்களாம்.
*S. G. R