520 Views
ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம் இந்தகாலம் மாறி இப்போதெல்லாம் ஆணுக்கும் ஆணுக்கும் கல்யாணம் பெண்ணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம் நடக்கிறது அதுவும் இனி மாறிப்போகும் போல..
இங்கிலாந்தைச் சேர்ந்த கிரேஸ் ஹெல்டர் என்ற இளம்பெண்ணே இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
புகைப்படக்கலைஞரான இவருக்கு எந்த ஆணையும் அல்லது பெண்ணையும் திருணம் செய்துகொள்ள விருப்பமில்லை.
இங்கிலாந்தை சேர்ந்த கிரேஸ் ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்ய விருப்பம் இல்லாத இவர் கடந்த 6 வருடமாக தன்னைதானே காதலித்து தன்னைதானே திருமணம் முடித்திருக்கின்றார்.
டெவன் என்ற இடத்தில் தன் நண்பர்கள் உறவினர்களை அழைத்து அவர்களுக்கு விருந்து வழங்கிய பின்னர் கண்ணாடி முன்பு நின்று கொண்டு தனக்குத் தானே மோதிரத்தை அணிவித்து திருமணம் செய்து கொண்டார் கிரேஸ். கண்ணாடியில் தோன்றிய தனது உருவத்துக்கு தானே முத்தம் கொடுத்து அன்பையும் பறிமாறிக் கொண்டார்.
கிரேசின் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள், இது வித்தியாசமான திருமண அனுபவத்தைப் பார்த்த அனுபவத்தைத் தந்ததாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.