உலகத்திலேயே மிகவும் பெரிதான தொலைக்காட்டியை (டெலஸ்கோப்) இந்தியாவோடு இணைந்து அமெரிக்கா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் இணைந்து அமைக்கின்றனர். இதில் முக்கியமான விசயமே,கீரியும் பாம்புமான இருக்கும் சீனாவும் இந்தியாவோடு இந்த திட்டத்தில் பங்கேற்பது தான்...
இது ஜப்பானில் உள்ள மவுனா கீ மலையில் 4,012 மீட்டர் உயரத்தில் கட்டப்படுகிறது.இந்தப்பணிக்காக ரூ.8,500 கோடி செலவிடப்படுகிறதாம்.இந்த தொலைக்காட்டி ஜப்பானுக்கு பெருமை சேர்க்கவிருப்பதால் செலவிடப்படுகின்ற தொகையில் கால் பகுதியை ஜப்பான் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் ஒரு கொசுறுத்தகவல்.
இந்த தொலைக்காட்டி(டெலஸ்கோப்) கட்டுமான பணியில் பங்கேற்கின்ற 5 நாடுகளையும் சேர்ந்த, 100 விண்வெளி விஞ்ஞானிகள் பங்கேற்கின்றார்கள்.2022-ம் ஆண்டில் நிறைவு பெறத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் இது, கட்டி முடிக்கப்பட்டவுடன் உலகிலேயே மிகப்பெரிய தொலைக்காட்டி என்ற பெருமையைப் பெறவுள்ளதாம்.
ஜப்பானின் ஒசாகா – டோக்கியோ நகரங்களுக்கு இடையேயான 500 கி.மீட்டர் தூரத்தில் சிறிய நாணயம் இருந்தால் கூட மிக துல்லியமாக பார்க்க முடியும் என்பதோடு,பூமியில் இருந்து மிக தொலைவில் உள்ள நட்சத்திரங்களையும் இதன் மூலம் தெளிவாக காண முடியுமாம்.
இதேவேளை, ஜப்பானில் இதே மவுனா கீ மலைப் பகுதியில், ஏற்கனவே கடந்த 1999–ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும், உலகிலேயே மிகப் பெரிய "சுபாரு" எனப்பெயரிடப்பட்ட ஒரு தொலைக்காட்டி உள்ளது.அதை விட 13மடங்கு அளவில் பெரியதாம், இன்னும் பெயரிடப்படாத இந்த தொலைக்காட்டி.
இப்போவே இலங்கையிலிருந்து பார்க்கும்போது சீனா தெரியுது.
ஜப்பானிலிருந்து பார்க்கும்போது சீனா தெரிகின்றதா...? கொஞ்சம் பார்த்து சொல்லுங்க ப்ளீஸ்....